எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்தோம்..மனைவியை பிரிவதாக ஹர்திக் பாண்டியா அறிவிப்பு!
மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிவதாக ஹார்திக் பாண்டியா அதிகாரபூர்வமாகத் அறிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா
செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரைக் காதலித்து 2020-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஹர்திக் பாண்டியா. இவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் உள்ளது.முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாகவும்,
இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதகாவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி இருந்தது. அதாவது இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிங்கிள் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருவது கவனிக்கப்பட்டது.
குறிப்பாக இன்ஸ்டாவில் நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்று பெயர் வைத்திருந்ததில் பாண்டியாவை நீக்கிவிட்டு வெறும் நடாசா ஸ்டான்கோவிச் என்று மாற்றியுள்ளார். அதோடு, ஹர்திக் பாண்டியா தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நடாசா நீக்கியிருந்தார்.
இதனை கவனித்த ரசிகர்கள் இவர்கள் இருவருக்கிடையே என்ன ஆனது என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தனர். இந்த நிலையில், தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கை பிரிவதாக ஹார்திக் பாண்டியா அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பிரிவதாக அறிவிப்பு
இதுகுறித்து ஹார்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “4 வருடங்கள் ஒன்றாக இருந்த பிறகு, நடாஷாவும் நானும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் எங்களால் இயன்றதை ஒன்றாக முயற்சித்து எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம்.
இதுதான் எங்கள் இருவருக்கும் சிறந்தது என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி, பரஸ்பர மரியாதை, நட்பு, நாங்கள் ஒரு குடும்பமாக இருந்ததால் இந்த முடிவு ஒரு கடினமான முடிவாகும். அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார்.
அகஸ்தியாவை இருவரும் கவனித்துக் கொள்வோம். மேலும், அவருடைய மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் கிடைக்க நாங்கள் ஒத்துழைப்போம். இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் உண்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.