ரோகித்துடன் மோதல் ..? வம்பிழுக்கும் வீரர்கள் - பின்னணியில் ஹர்திக் பாண்டியா..?
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு வருட தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
அணியில் விரிசலா..?
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மும்பை அணியின் தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா இவருக்கு மத்தியில் பனிப்போர் நிலவுவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
காரணம், மும்பை அணியின் கேப்டன்ஷிப். இது தொடர்பாக ரோகித்தின் மனைவி வெளிப்டையாகவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால், மும்பை அணி அதற்கு சில காரணங்களும் வைத்துள்ளது.
இந்த சூழலில் தான், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவருமே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
உள்ளூர் போட்டிகளில் விளையாட அறிவுறுத்தியும் இருவரும் அதனை புறக்கணித்ததன் காரணமாக அவர்களுக்கு பிசிசிஐ செக் வைத்துள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
ஹர்திக் பாண்டியா
அணியில் இருந்து தங்கள் நீக்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவும் ஒரு காரணமாக நினைக்கும் இருவருமே தற்போது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியை குறிவைத்திருக்கும் ஹர்திக் பாண்டியா தான் இவர்களுக்கு பின்னணியில் இருக்கிறார் என்றும் வீரர்களுடன் முரண்பாடு ஏற்பட்டால் கேப்டன் மாற்றப்படும் பட்சத்தில் தான் அப்பதவியை எளிதாக அடையலாம் என்ற நோக்கத்தில் ஹர்திக் இவ்வாறு ஈடுபடுவதாக கூறப்பட்டு வருகின்றது