அம்பானி குடும்பத்தின் எச்சரிக்கை - அதிர்ந்த ஹர்திக்!! விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick Apr 24, 2024 05:06 AM GMT
Report

மும்பை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மும்பை அணி

இந்த ஆண்டு பெரும் சவாலை மும்பை அணி சந்தித்து வருகின்றது. அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மாற்றப்பட்டதில் துவங்கி, ரசிகர்கள் அணியை விமர்சிக்க துவங்கினர். அதுவும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

hardik-gets-warning-from-ambanis-team-loss

ஆனால், எடுத்த முடிவில் தீர்க்கமாக உள்ளது மும்பை அணி. தொடர் துவங்கியது முதலே மும்பை அணி சறுக்கலை சந்திக்கிறது. இது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 3'இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்கு அணியின் கேப்டனான ஹர்திக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

hardik-gets-warning-from-ambanis-team-loss

அதே நேரத்தில், ஹர்திக் பாண்டியா சரியான ஃபார்மிலும் இல்லை. பௌலிங் பேட்டிங் என இரண்டிலும் இதுவரை ஒரு போட்டியிலும் ஹர்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

கேப்டன் பதவியில்...

கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் இருக்கும் நிலையில், அவரின் ஃபார்ம் காரணமும் இணைத்து விமர்சனம் அதிகரிக்க செய்துள்ளது. மும்பை அணி கோப்பையை வென்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக கடந்த 2020-ஆம் ஆண்டு தான் அந்த அணி கோப்பையை வென்று இருந்தது.

hardik-gets-warning-from-ambanis-team-loss

3 ஆண்டுகள் சொதப்பியதன் காரணமாக தான் ரோகித் மாற்றப்பட்டார் என்றெல்லாம் கூறப்படும் நிலையில், தற்போது தொடர் தோல்வி அணிக்கு பெரும் நெருக்கடியை உருவாகியுள்ளது. இதன் வெளிப்படையாக தான், மும்பை அணி நிர்வாகமான அம்பானி குடும்பம் ஹர்திக் பாண்டியாவிற்கு எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரோகித் கொடுத்த அழுத்தம் - பணிந்த ஹர்திக்? நேற்றைய போட்டியில் இதனை கவனிச்சீங்களா

ரோகித் கொடுத்த அழுத்தம் - பணிந்த ஹர்திக்? நேற்றைய போட்டியில் இதனை கவனிச்சீங்களா


அதன்படி, இனி வரும் போட்டிகளில் அணி வெற்றி பெறவில்லை என்றால் கேப்டன் பதவியில் இருந்து விலகும் படி ஹர்திக் பாண்டியாவுக்கு அம்பானி குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

hardik-gets-warning-from-ambanis-team-loss

வரும் சனிக்கிழமை ஏப்ரல் 27ஆம் தேதி டெல்லி அணியுடன் மும்பை விளையாடுகிறது. இனி வரும் போட்டிகளில் பெரிய வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளில் தோல்வி, ரன் ரேட் அடிப்படையில் தான் மும்பை அணி அடுத்து சுற்று வாய்ப்பு அமையும்.