கம்பெனிக்காக தான் இந்த உடம்பு..லீவே எடுக்காத சின்சியர் ஊழியர் - CEO சொன்ன அந்த வார்த்தை!
சின்சியராக வேலை பார்க்கும் ஊழியரிடம் கம்பெனி CEO சொன்ன வார்த்தை வைரலாகியுள்ளது.
சின்சியர் ஊழியர்
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவி இருக்கின்றனர். அந்த வகையில் தான், பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.
இங்கு இன்ஜினியராக வேலை செய்யும் இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இந்த விஷயம் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது.
இதனால் அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர், 'நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என்று கூறியுள்ளார்.
CEO வார்த்தை
இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார், நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகாக செயல்படும்' என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த சிஇஓ பூரிப்படைந்துள்ளார்.
இந்த அளவுக்கு கடமை உணர்ச்சியாக இருக்கும் அந்த ஊழியரை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஇஓ, அவர்களின் இந்த உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அதை தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமன்ட் செக்சனில் குவித்து வருகின்றனர்.