வாழ்க்கையில் Leave-வே எடுக்காமல் அலுவலகத்திற்கு சென்ற பெண் - 90 வயதில் பணி ஓய்வு..!
அலுவலகத்தில் சேர்ந்த நாட்கள் முதல் இது வரை ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் பெண் ஒருவர் சென்ற நிலையில் 90 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
லீவே எடுக்காத மூதாட்டி
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மெல்பா மெபேன் என்ற பெண் பணியாற்றி வந்தார். இவர் இங்கு 1946 ஆம் ஆண்டு இவர் பணியில் சேர்ந்துள்ளார்.
பணியில் சேர்ந்த நாள் முதல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரின் தேவைகளை புரிந்து கொண்டு, தரமான வகையில் அவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதில் மூதாட்டி மும்முரமாக பணிபுரிந்து வந்துள்ளார்.
தான் மட்டும் கடுமையாக உழைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், பணி சார்ந்து மிகுந்த ஈடுபாடு மற்றும் திறமை ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்து சக ஊழியர்களுக்கு எண்ணற்ற முறை இந்த மூதாட்டி பயிற்சி அளித்துள்ளாராம்.
74 ஆண்டுகள் கடும் உழைப்பாளி
மேலும் வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குவது இவரது பழக்கமாக இருந்துள்ளது. பல்பொருள் அங்காடிக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மெல்பா மெபேனின் அன்பு மற்றும் கருணை உள்ளம் ஆகியவற்றைப் பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடிக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் மெல்பா மெபேனின் அன்பு மற்றும் கருணை உள்ளம் ஆகியவற்றை பார்த்து ஈர்க்கப்பட்டுள்ளனர்.
பல்பொருள் அங்காடியில் நீண்ட காலம் பணிபுரிந்தவர் என்றும் கடுமையான உழைப்பாளி என்பதால் இவருக்கு சிறப்பு விருதினை வழங்கியது.
வேலையில் மட்டும் அல்லாத தனது குடும்பதிலும் அக்கறையாக செயல்பட்டு வந்த அவர் தனது மகன் டெர்ரியை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்த நிலையில் அவர் நிதி ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
பல்பொருள் அங்காடியில் ஏராத்தாழ 74 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இவர் தனது பணியை நிறைவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.