ஹர்பஜன் சிங் ஸ்டைலில் பந்துவீசிய ரோஹித் சர்மா: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங் போன்று பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது, சேப்பாக்கம் மைதானம் இந்திய பவுலர்களுக்கு சாதகமாக இல்லாததால் விக்கெட்டுகள் எடுக்க திணறி வருகின்றனர்.
இதனால் பகுதி நேர பந்துவீச்சாளரான ரோகித் சர்மாவை "ஆஃப் ஸ்பின்" போட அழைத்தார் கேப்டன் விராட் கோலி. அப்போது சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஸ்டைலில் ஓடி வந்து பந்து வீசினார் ரோகித் சர்மா. இப்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
In a Marathi Article wow @News18lokmat pic.twitter.com/Mz1JL1Ihmp
— Saish ? (@CricketSaish45) February 6, 2021
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil