அஸ்வினுடன் பிரச்னை.. இருவரிடையே மோதல் உண்மையா? போட்டுடைத்த ஹர்பஜன் சிங்!
அஸ்வினுடன் மோதல் என்ற வதந்தி குறித்து ஹர்பஜன் சிங் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.அவரது ஓய்வுக்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அவரே ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
"நான் எங்கே இருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை.உண்மையில் நான் 2012ல் ஒரு சத்தியத்தை எனக்கு நானே செய்தேன். நாங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்தோம். அது சவாலானதாக இருந்தது.
அப்போதுதான் நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடத் துவங்கி இருந்தேன். இனி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் திடீரென தந்து ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை மட்டுமல்ல இந்தியாவை சேர்ந்த பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் அஸ்வின் ஓய்வுபெறுவதாக அறிவித்த பிறகு ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்
அதேபோல அஸ்வினுக்கும், தனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு நீடிப்பதாக வெளியான தகவல்களுக்கும் ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்து உள்ளார். அதாவது, ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது, நான் சமூக வலைதளங்களைத் தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன்.
எனக்கும் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ, சண்டை, சச்சரவு உண்டானாலோ அவரிடம் சென்று என்ன பிரச்சினை என்று முதலில் கேட்பது நானாக தான் இருப்பேன். ஆனால் இதுவரை அப்படி எதுவும் எங்களுக்குள் நடந்ததது இல்லை. இனியும் நடக்காது.
ஏனென்றால் அவருடைய விதியில் எது இருக்கிறதோ, அது அவருக்கு கிடைக்கும். என் விதி என்னவோ அதை நான் பெற்றேன். உண்மையில் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அற்புதமான பந்து வீச்சாளராக இருந்துள்ளார்.
அவர் செய்திருக்கும் சாதனைகளை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று கூறினார். மேலும், சோஷியல் மீடியாக்களில் விஷயங்களை திரித்து, அஸ்வினுடன் எனக்கு பிரச்சனை இருப்பது போல் கருத்துக்களை பதிவிடுவது என்பது அவர்களின் பார்வை.
இந்தியா கிரிக்கெட் விளையாடும் ஆடுகளங்களோ நல்ல டிராக்குகள் இல்லை, இந்த டிராக்குகளில் நிறைய ஸ்பின் உள்ளது. இதனால், இரண்டரை நாட்களில் போட்டிகள் முடிந்துவிடும் என்ற உண்மையைப் பற்றி நான் கொஞ்சம் குரல் கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.