சத்தியத்தை மீறிய அஸ்வின்; ஓய்வுக்கு காரணமே இதுதான் - நடந்தது என்ன?
அஸ்வின் ஓய்வுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வின்
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.
அவரது ஓய்வுக்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி அவரே ஒரு விஷயத்தை கூறியுள்ளார். "நான் எங்கே இருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை.
ஓய்வுக்கான காரணம்
உண்மையில் நான் 2012ல் ஒரு சத்தியத்தை எனக்கு நானே செய்தேன். நாங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்தோம். அது சவாலானதாக இருந்தது. அப்போதுதான் நான் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடத் துவங்கி இருந்தேன்.
இனி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்கக்கூடாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்." எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பின் 12 ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.