சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை; வீட்டிலேயே இருக்கட்டும் - 6 மாதத்தில் இத்தனை தோல்விகள்!
ஹர்பஜன் சிங் இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அணி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதனால் அணி கடுமையான விமர்சங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், நமக்கு அணியில் சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை. சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என விரும்புவர்கள் வீட்டில் இருந்தே கிரிக்கெட் விளையாடிக் கொள்ளட்டும். சிறந்த வீரர்களால் மட்டுமே அணி முன்னேறும்.
ஹர்பஜன் சிங் காட்டம்
இந்திய அணிக்குள் சூப்பர் ஸ்டார் கலாச்சாரம் ஒழிய வேண்டும். அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கடைசி போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே சூழல் தான் சர்ஃபராஸ் கானுக்கும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக ஆடிய வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்.
வீரர்களின் முன் வரலாற்றையோ, பெயரையோ பார்த்து தேர்வு குழு செயல்பட கூடாது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் ஓய்வை அறிவிக்கலாம், அறிவிக்காமலும் போகலாம்.
ஆனால் அவர்களை தேர்வு செய்வது தேர்வு குழுவின் கைகளில் மட்டுமே இருக்கிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு தான் அதனை முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.