டெல்லி அணியின் கேப்டனை உடனே மாற்றுங்கள் - கதறும் ஹர்பஜன் சிங்
டெல்லி அணியின் கேப்டனை உடனடியாக மாற்றக்கோரி ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி அணி
டேவிட் வார்னர் தலைமையில், டெல்லி அணி இந்த தொடர் முழுவதும் மோசனமா ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.
இனி ஆடப்போகும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை உறுதிப்படுத்த முடியாது. இதன் தொடர் தோல்விக்கு கேப்டன் டேவிட் வார்னர் தான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஹர்பஜன் சிங் ஆதங்கம்
இந்நிலையில், வார்னரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், டெல்லி அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. இவை அனைத்திற்கும் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் முன்னரே அவுட்டாகி வெளியேறி விட்டார்.
அவர் 50 பந்துகளை விளையாடினால் அவை அனைத்தையும் வீணடித்து இருப்பார். பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது வார்னர் மற்ற வீரர்கள் குறித்து பேசுகிறார். அவர் தான் அணிக்கு என்ன செய்தோம் என்பதை சொல்லவில்லை. இந்த தொடரில் வார்னர் 300க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார்.
ஆனால் ஸ்ட்ரைக் படு மோசமாக உள்ளது. டெல்லி அணியின் தோல்விக்கான காரணத்தை டேவிட் வார்னர் கண்ணாடியில் தேட வேண்டும். அவர் உடனடியாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அதனை அக்சர் படேலிடம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.