காணாமல் போன 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ - அதிர்ச்சியில் டெல்லி அணி
டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு உபகரணங்கள் காணாமல் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அணி
16வது ஐபிஎல் தொடர் சென்னை, மும்பை, அகமதாபாத், கொல்காத்தா ஹைதராபாத் உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஸ், பிலிப் சால்ட் உள்ளிட்ட சிலரின் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்ட
விளையாட்டு உபகரணங்கள் அவர்களின் கிரிக்கெட் கிட் பேகிலிருந்து காணாமல் போயிருக்கிறது. டெல்லி திரும்பிய அணியினரின் கிட் பேக்குகள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் அங்குக் கொண்டு வரப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிர்ச்சி
அப்படி வந்து இறங்கிய மொத்த உபகரணங்களில் இவை மட்டும் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது. இவற்றில், மூன்று டேவிட் வார்னருக்கும், இரண்டு மிட்செல் மார்ஷுக்கும், மூன்று பில் சால்ட்டிற்கும், ஐந்து யஷ் துல்லுக்கும் சொந்தமானது என தெரியவந்துள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று டெல்லி கேபிடல்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து போலீஸாரிடம் புகாரளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் கணக்கையே தொடங்காத ஓர் அணியாகக் கடைசி இடத்தில் டெல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.