மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய கேரள வனத்துறையினர் - அதிர்ச்சி சம்பவம்!
மலைவாழ் பெண்களிடம் அத்துமீறிய விவகாரத்தில் கேரள வனத்துறையினர் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பெண்களிடம் அத்துமீறல்
தென்காசி, வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் அங்குள்ள இரண்டு பெண்கள் மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது கேரள வனத்துறையினர் அவர்களிடம் சேலையை பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர்.
மேலும், மீண்டும் காட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கேரள வனத்துறை அதிகாரிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டு நடத்தி சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர்.
அதன் அடிப்படையில், அத்துமீறிய வனத்துறை அதிகாரிகளை காவல்நிலையத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு நான்கு பேரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்துள்ளனர்.