சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய பாஜக நிர்வாகி - தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
சசிகலா புஷ்பாவிடம் பாஜக பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அத்துமீறிய பாஜக நிர்வாகி
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் முன்னாள் எம்பியும், பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டார்.
அப்போது பாஜக மூத்த நிர்வாகி பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டார். அவர் சசிகலா புஷ்பாவிடம் அத்துமீறிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோ பதிவில், கூட்ட நெரிசலில் நிற்கும் சசிகலா புஷ்பா எரிச்சலோடு நின்ற நிலையில் அவருடைய சேலை பின்னால் நின்ற பாலகணபதி அருகே மாட்டிக் கொண்டது.
அதை எடுக்க பாலகணபதி உதவுகிறார். மேலும் அவர் மலர் வளையம் வைக்கும் போது சசிகலாவின் கையை அவர் பிடிக்க முயற்சிப்பது போல தோற்றமளிக்கிறது.
மகளிர் ஆணையம் நோட்டீஸ்
பின்னர் இருவரும் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கம் எழுப்புகின்றனர்.இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில்,
தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து பாஜக பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சசிகலா புஷ்பாவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது குறித்து பொன்.பாலகணபதி வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவம் பாஜக கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Sasikalapushpa #BJP இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் சசிகலா புஷ்பா #Balaganapthy pic.twitter.com/4fmgDdhfs6
— Neelamegam S (@NeelamegamS3) September 13, 2022