14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் - நடந்தது என்ன?
14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த மதரசா ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
கேரளா, பாலக்காடு அருகே கருகாபுத்தூரில் மதரசா கூடம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மதரசாவுக்கு சென்று வந்துள்ளான். அங்கு சென்று வந்த பின்பு அந்த சிறுவனின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டது.
இதனை கவனித்த பெற்றோர், அந்த சிறுவனிடம் கேட்ட போது அவர் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். இதையடுத்து பெற்றோர் அந்த சிறுவனை மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்றனர்.
மனநல ஆலோசனை
அங்கு சிறுவனுக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்ட போது, மதரசாவில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள ஆசிரியர் ஒருவரே சிறுவனுக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் சாலிசேரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக மதரசா ஆசிரியர் இர்ஷாத் அலி என்பவரை கைது செய்தனர்.
மதரசா ஆசிரியர் கைது
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான இர்ஷாத் அலி தமிழகத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. மேலும் இதே மதரசாவில் பணிபுரியும் இன்னொரு ஆசிரியர் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.