சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்; ரேஷன் கடையில் நடந்த அதிரடி- அமைச்சர் உத்தரவு!

Tamil nadu Dindigul
By Swetha Jul 25, 2024 08:22 AM GMT
Report

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் சக்கரபாணி உத்தரவிடப்பட்டுள்ளார்.

ரேஷன் கடை

தமிழகத்தில் உள்ள கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் அதை சரிவர பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளது.

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்; ரேஷன் கடையில் நடந்த அதிரடி- அமைச்சர் உத்தரவு! | Happy News For Dindugal Ration Card Holders

இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் அதிரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் த்திமரத்துவலசு கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

இனி துவரம் பருப்பு, பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

இனி துவரம் பருப்பு, பாமாயில்.. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் உத்தரவு

அப்போது பெண் ஒருவர் ரேஷனில் பொருள் விநியோகிப்பது முறையாக இல்லாதது குறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சற்றும் யோசிக்காமல் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அத்திமரத்துவலசு ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றார்.

சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ்; ரேஷன் கடையில் நடந்த அதிரடி- அமைச்சர் உத்தரவு! | Happy News For Dindugal Ration Card Holders

அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் இருப்பு அவற்றின் தரம் மற்றும் விநியோ பதிவேடு ஆகியவற்றை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். மேலும், ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை குறித்தும் அங்கிருந்த பொதுமக்கள் முன்னிலையிலேயே உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் அங்கிருந்த பொதுமக்களிடம் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் பற்றி கேட்டறிந்தார். அத்துடன், பொதுமக்களுக்கு அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்கள் முறையாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார்.