473 வருஷங்களா அணையாமல் எரியும் விளக்கு - எப்படி, எங்கே தெரியுமா?
473 ஆண்டுகளாக விளக்கு ஒன்று அணையாமல் எரிகிறது என்றால் நம்பமுடிகிறதா?
அணையா விளக்கு
மத்திய பிரதேசம், சித்திரகூத்து என்ற பகுதியில் சக்தி வாய்ந்த அனுமான் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயில் பல நூற்றாண்டுகளை கடந்த கோயிலாக வரலாறை கொண்டுள்ளது.
இந்நிலையில் இங்கு அதிசயம் ஒன்று நிலவி வருகிறது. அதனைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
குவியும் பக்தர்கள்
அது என்னவென்றால், இந்த கோயிலில் உள்ள விளக்கு ஒன்றை தவறுதலாக துளசிதாஸ் என்பவர் ஏற்றி வைத்ததாக கூறப்படுகிறது. அவர் ஏற்றி வைத்த விளக்கு தான் இன்று வரை அணையாமல் பிரகாசமாக எரிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள கோவிலின் பூசாரி மோஹித் தாஸ், அணையா ஜோதியை பார்த்து நாம் செய்யக்கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். அதன்பிறகு நம்முடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானதாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.