ஹன்சிகாவுக்கு திருமணம்..ரெடியாகும் ஜெய்பூர் அரண்மனை - சுடச் சுட தகவல்!

Hansika Motwani Tamil Cinema Indian Actress Marriage
By Sumathi Oct 16, 2022 06:30 PM GMT
Report

ஹன்சிகாவின் திருமணத்தை முன்னிட்டு ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹன்சிகா

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் ’எங்கேயும் காதல்’ ‘வேலாயுதம்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ ’சேட்டை’ ’சிங்கம் 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஹன்சிகாவுக்கு திருமணம்..ரெடியாகும் ஜெய்பூர் அரண்மனை - சுடச் சுட தகவல்! | Hansika Motwani Marriage Will Be Held In December

சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 ஜெய்ப்பூர் அரண்மனை

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் இது அவரது குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்து திருமணம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் ஹன்சிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகாவுக்கு திருமணம்..ரெடியாகும் ஜெய்பூர் அரண்மனை - சுடச் சுட தகவல்! | Hansika Motwani Marriage Will Be Held In December

இந்த திருமணம் புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற உள்ளது. இதையொட்டி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தயாராகி வருகிறது. ஆடம்பர முறையில் அதிக பொருட்செலவில் இந்த திருமணம் நடைபெறவிருக்கிறது.

டிசம்பர் மாதம் திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டாலும், எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. ஹன்சிகா மோத்வானி திருமணம் முடிக்கப் போகும் மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.