கல்யாணத்திற்கு ரெடியான ஹன்சிகா... மாப்பிள்ளை யார் தெரியுமா?

Silambarasan Hansika Motwani Only Kollywood Marriage
1 வாரம் முன்

நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் பிரபல அரசியல்வாதி மகனுடன் திருமணம் நடைப்பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஹன்சிகா

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை ஹன்சிகா, கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார்.

கல்யாணத்திற்கு ரெடியான ஹன்சிகா... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Hansika Motwani Married Soon

இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு போன்ற படங்களில் நடித்தார். இவ்வாறு அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் பணியாற்றிய ஹன்சிகா குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

விரைவில் டும்..டும்

தொடர்ந்து ஹன்சிகா, நடிகர் சிம்பு இருவரும் காதலித்தனர். ஆனால் இவர்களது காதல் தோல்வியில் முடிந்தது. பிரேக்கப்பிற்கு பிறகு சிம்பு, ஹன்சிகா இருவரும் ‘மஹா’ படத்தில் இணைந்து நடித்தனர்.

கல்யாணத்திற்கு ரெடியான ஹன்சிகா... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Actress Hansika Motwani Married Soon

இந்நிலையில் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனை ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஏற்பாட்டை அவரது குடும்பத்தினர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் இருந்து எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.