விவாகரத்தை உறுதிசெய்த நடிகை ஹன்சிகா - கணவர் ஃபோட்டோக்கள் நீக்கம்!
நடிகை ஹன்சிகா தனது கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஹன்சிகா
மாப்பிள்ளை படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹன்சிகா. தொடர்ந்து வேலாயுதம், சூர்யா உடன் சிங்கம் 2, கார்த்தியின் பிரியாணி, சிவகார்த்திகேயன் உடன் மான் கராத்தே என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வலம் வந்தார்.
இவர் நடிகர் சிம்புவுடன் ஜோடியாக வாலு படத்தில் நடித்தார். அப்போது இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
விவாகரத்து?
இதனையடுத்து 2022ம் ஆண்டு சோஹைல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு இவர் 2வது மனைவி.
கணவருடன் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீப காலமாக அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.