ஹன்சிகா திருமணம் கோலாகலம் - பார்ட்டியில் என்னா குத்தாட்டம்!

Hansika Motwani Indian Actress Marriage Viral Photos
By Sumathi 1 மாதம் முன்

நடிகை ஹன்சிகாவின் திருமண நிகழ்ச்சிகள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹன்சிகா திருமணம்

நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

ஹன்சிகா திருமணம் கோலாகலம் - பார்ட்டியில் என்னா குத்தாட்டம்! | Hansika Marriage Sangeeth Party Viral

இந்நிலையில், காதல் நகரமான பாரிஸில் ஈபிள் கோபுரத்தின் புன் தொழிலதிபர் சோஹேல் கதுரியா தனக்கு காதலைச் சொல்லும் புகைப்படங்களை ஹன்சிகா இன்ஸ்டாவில் பகிர்ந்தார். தொடர்ந்து இவர்களது திருமணம் நாளை நடைபெற உள்ளது.

கோலாகலம்

ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது. தற்போது, திருமண சடங்குகள் தொடங்கி களைகட்டியுள்ளது. இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் தொடங்கியது.

ஹன்சிகா திருமணம் கோலாகலம் - பார்ட்டியில் என்னா குத்தாட்டம்! | Hansika Marriage Sangeeth Party Viral

தொடர்ந்து இன்றைய தினம் இவார்களது திருமணம் நடைபெற்ற நிலையில், முன்னதாக சங்கீத் நிகழ்ச்சியில் அனைவருடனும் ஹன்சிகா நடனமாடியிருந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமண ஒளிப்பரப்பு உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.