விக்ரம் லேண்டரையே ஃபோட்டோ பிடித்த சந்திராயன் 3 ரோவர் - வைரலாகும் ஸ்மைல் ப்ளீஸ்!

India ISRO Chandrayaan-3
By Sumathi Aug 31, 2023 03:07 AM GMT
Report

விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரயான் - 3 

சந்திரயான் - 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்த நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி அளவில் விண்ணில் ஏவியது. சாஃப்ட் லேண்டிங் எனப்படும் நிலவில் சந்திரயான் - 3 விண்கலத்தை

விக்ரம் லேண்டரையே ஃபோட்டோ பிடித்த சந்திராயன் 3 ரோவர் - வைரலாகும் ஸ்மைல் ப்ளீஸ்! | Handrayaan3 Mission Pragyan Rover Clicked An Image

தரை இறங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி நிகழ்ந்தது. தொடர்ந்து, 27ஆம் தேதி அன்று தென் துருவத்தில் நிலவும் வெப்பநிலை குறித்த தகவல்களை சந்திரயான் - 3 விண்கலம் பூமிக்கு அனுப்பி இருந்தது.

ஸ்மைல் ப்ளீஸ்!

மேலும், நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ரோவரில் உள்ள கருவி (Laser-Induced Breakdown Spectroscope) நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து உள்ளது. இந்நிலையில், ’ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற தலைப்பில்இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது.

இதில் இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்தது. இந்த படமானது பிரக்யான் ரோவரில் உள்ள நேவிகேஷன் (NavCam) கேமராவால் எடுக்கப்பட்டது. சந்திரயான்-3 பணிக்கான NavCamகள் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தால் (LEOS உருவாக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.