117 அடி உயரம்.. வீல் சேருடன் விழுந்த இளைஞர்.. அடுத்து நேர்ந்த சம்பவம் - வைரல் வீடியோ!
117 அடி உயரத்தில் இருந்து இளைஞர் வீல் சேருடன் குதித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இளைஞர்
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில், இந்தியாவிலேயே மிக உயரமான பங்கி ஜம்பிங் சாகசம் தளம் அமைந்துள்ளது. அங்கு பங்கி ஜம்பிங் சாகசம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, அபைய் டோக்ரா என்ற கால்கள் செயல் இழந்த இளைஞர் இந்த சாகசத்தை நிகழ்த்தி இருக்கிறார்.
அவர் சுமார் 117அடி உயரத்தில் இருந்து குதிக்க வைக்கும் முன்பு அவரது வீல் சேருடன் சேர்த்து அவருக்கும் இந்த சாகசத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ
பின்னர் அவர் சாகசத்தை நிகழ்த்தியதை நினைத்து பெரும் மகிழ்ச்சி அடைகிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒரு சிலர் அந்த இளைஞரின் தைரியத்தை பாராட்டினர். அதே நேரம் சில நெட்டிசன்கள் சமூக வலைதள புகழுக்காக இவ்வாறு ஒருவரின் உயிரை பணயம் வைப்பது மிகவும் தவறு என்று தெரிவித்துள்ளனர்.