மக்களே எச்சரிக்கை..சானிடைசரால் கோமா,பார்வையிழப்பு ஏற்படும் அபாயம்!
சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் கோமா,பார்வையிழப்பு ஏற்பட நேரிடலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சானிடைசர்
கடந்த 2019 ஆம் ஆண்டு உலகமே கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டது. இதனால் பல உயிரிழப்புகளை மனித இனம் சந்திக்க நேர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றோடு கைகளை அடிக்கடி கழுவுவதை வலியுறுத்தப்பட்டது.
ஆனால், எல்லா இடத்திலும் சோப் போட்டு கழுவ வாய்ப்பில்லாதவர்களுக்கு சானிடைசர்கள் கை கொடுத்தன. ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் உயிர் குடிக்கும் ஆபத்துகளை விளைவிக்கும் என அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தற்போது எச்சரித்து உள்ளனர்.
இதனை சந்தையில் விற்பனையாகும் கை சுத்திகரிப்பு மற்றும் கற்றாழை ஜெல்களை திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளனர். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அண்மையில், ரூபா அலோ ஹேண்ட் சானிடைசர் ஜெல் ஆல்கஹால் 80%’ மற்றும் ’அருபா அலோ அல்கோலடா ஜெல்’ ஆகியவை திரும்பப் பெற உத்தரவிட்டது.
ஏற்படும் அபாயம்
இவைகளில் பாதகமான நிகழ்வுகள் ஏதும் இல்லை என்றாலும் தற்செயலாக அவற்றை உணவில் கலந்ததில், அவற்றை உட்கொண்ட குழந்தைகள் அதிக ஆபத்துக்கு ஆளானார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், "இந்த பொருட்களை தங்கள் கைகளில் பயன்படுத்தும் அனைத்து நபர்களும் ஆபத்தில் இருந்தாலும், இந்த தயாரிப்புகளை தற்செயலாக உட்கொள்ளும் இளம் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் எத்தனால் ஆல்கஹாலுக்கு மாற்றாக இந்த மெத்தனால் தயாரிப்புகளை அருந்திய பெரியவர்கள் நச்சுத்தன்மைக்கு ஆளாகி உள்ளார்கள்’ என்று தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து உபயோகித்தால் குமட்டல், வாந்தி, தலைவலி, மங்கலான பார்வை ஆகியவற்றில் தொடங்கி உச்சமாக, கோமா, வலிப்புத்தாக்கம், நிரந்தர பார்வையிழப்பு, மத்திய நரம்பு மணடலம் முடக்கம் மற்றும் கடைசியாக மரண ஆபத்து என இவை அத்தனையும் குறிப்பிட்ட ரக ஹேண்ட் சானிடைசர்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது நேர வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.