மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா? - கொந்தளித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

sanitizer fishermen maduraihighcourt
By Irumporai Dec 31, 2021 07:30 AM GMT
Report

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகம் வந்த போது மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது . இந்த செயல் மனிதநேயமற்ற செயல் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும்,கொரோனா அச்சம் இருப்பின் கிருமிநாசினி தெளித்ததற்கு பதிலாக தமிழக மீனவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது .

இதற்கிடையில்,68 மீனவர்களும் அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறிய நிலையில்,பொங்கலுக்கு முன் தமிழக மீனவர்களை மத்திய அரசு அழைத்து வரும் என்ற நம்பிக்கை உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மேலும்,இலங்கை அரசு கைது செய்யும் தமிழக மீனவர்களை கண்ணியம் மனிதாபிமானத்துடன் நடத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.