கையில் மூக்கை வளர்த்து முகத்தில் பொருத்திய டாக்டர்ஸ் - சம்பவம் என்ன!
பெண் ஒருவரின் கையில் மூக்கை வளர்த்து, அதனை மருத்துவர்கள் அவரின் மூக்கில் பொருத்தியுள்ளனர்.
கேன்சர் பாதிப்பு
பிரான்ஸ், துலூஸைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2013ஆம் ஆண்டு நாசிக்குழி புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்றார். இதன் காரணமாக அவர் தனது மூக்கின் ஒரு பகுதியை இழந்தார்.

புனரமைப்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவர் உறுப்பு இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இதனால், குருத்தெலும்புக்கு பதிலாக, முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட, உயிர் மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பயன் மூக்கு, அவரது முன்கையில் பொருத்தப்பட்டது.
மருத்துவர்கள் சாதனை
அந்த மூக்கை மருத்துவர்கள், தோல் ஒட்டுதலைப் பயன்படுத்தி மூடினர். இரண்டு மாத வளர்ச்சிக்கு பின்னர் அந்த மூக்கு அவரது முகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும் மூன்று வாரங்கள் ஆன்ட்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில்,
அப்பெண் நலமுடன் இருக்கிறார் என்றும், எலும்பு புனரமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கும் செர்ஹம் எனும் பெல்ஜிய நிறுவனத்துடன் மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.