1 வாரத்திற்கு முன்பே அந்த சம்பவத்தை அப்படியே கணித்த ஜோதிடர் - யார் இந்த ஹாமில்டன்?
எண்ணெய் கப்பல் விபத்தை 1 வாரத்திற்கு முன்பே கணித்த ஜோதிடர் விவரத்தை பார்ப்போம்.
ஹாமில்டன் பார்கர்
சர்வதேச அளவில் கணிப்பாளர்களான நாஸ்ட்ராடாமஸ் மற்றும் பாபா வெங்காவின் கணிப்புகள் பிரபலமாக உள்ளன. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி இங்கிலாந்து தெற்கு கடற்பகுதியில் சரக்கு கப்பல்கள் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தின.
இதனை பிரபல ஜோதிடரான பிரிட்டனை சேர்ந்த கிரேக் ஹாமில்டன் பார்கர் மார்ச் 4 ஆம் தேதியே கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் யூடியூபில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதிர்ச்சி கணிப்புகள்
அதில், ஒரு கப்பலோ அல்லது ஏதோ ஒன்று பிரச்சனையில் இருப்பதைப் பார்த்தேன். அது ஒரு எண்ணெய் டேங்கராக இருக்கலாம். ஒருவேளை அது பயணிகளாக இருக்கலாம்.
ஆனால் ஏதோ ஒருவித பிரச்னை அதில் இருப்பது போல் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஹாமில்டனும், அவரது மனைவியும் இணைந்து கொரோனா பாதிப்பு, பிரெக்சிட், இங்கிலாந்து ராணியின் மரணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை கணித்துள்ளார்கள்.