ஹமாஸின் மூளையாக இருந்த முக்கிய தலைவர் கொலை - மீண்டும் தீவிரமடையும் போர்!

Israel Death Israel-Hamas War
By Sumathi Jan 03, 2024 10:02 AM GMT
Report

ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

பாலஸ்தீனியத்தை சார்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டுக்கு (Israel Palestine War) எதிராக தனது போர் அறிவிப்பை வெளியிட்டு, திடீரென தாக்குதலை முன்னெடுத்தது.

hamas israel war

அதன்பின், பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவுடன் களத்தில் தனது தாக்குதலை முன்னெடுத்தது. தற்போது வரை காசா நகருக்குள் குண்டு மழை பொழிந்து வருகிறது. இஸ்ரேல் தரப்பில் 1500க்கும் மேல், பாலஸ்தீனியத்தின் தரப்பில் பலி எண்ணிக்கையானது 21,000-ஐ கடந்துள்ளது.

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் - பரபரப்பு!

Israel War: கேரளாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் - பரபரப்பு!

முக்கிய தலைவர் கொலை

இந்நிலையில் பெய்ரூட்டில் இஸ்ரேலில் வானொலி மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல் அரூரி மற்றும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. சலே அல் அரூரியின் மரணம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் ஹமாஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் அரூரி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

hamas-deputy-leader-saleh-al-aruri

மேலும் லெபனானில் உள்ள பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா கூறிய நிலையில் சற்று பதற்றம் அதிகரித்துள்ளது.