கனமழை எதிரொலி - இந்த 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து!
கனமழை எதிரொலியாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழை
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் வரும் 22ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது.
அந்த வகையில் தொடர் மழை காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (டிசம்பர் 18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து
மேலும், கனமழை எதிரொலியாக நெல்லை உள்பட 5 மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.