அரை நிர்வாணமாக சாலையில் ரகளை - போலீசாரை தாக்கியதால் பரபரப்பு!
அரை நிர்வாணமாக நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகளை
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலராக ஆனந்தராஜ் பணியாற்றி வருகிறார். வழக்கம்ப்போல் அண்ணா சாலை பகுதியில் பணியில் இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்து ஒரு நபர் பேருந்துக்கு வழிவிடாமல் அதை பார்த்த காவலர் ஆனந்தராஜ் அந்த நபரை ஓரமாகச் செல்லும்படி கூறியுள்ளார்.
பேருந்து ஓட்டுநரும் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்டைந்தது. இதில் பொருமையை இழந்த காவலர் ஆனந்தராஜை இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் சட்டையை பிடித்து கன்னத்தில் தாக்கினார்.
போலீசார்
அருகில் இருந்த மற்ற காவலர்கள் ஆனந்தராஜை மீட்டனர். அந்த நபரை பிடிக்க முயன்ற பொழுது ஆடைகளை கழட்டி அந்த நபர் அரை நிர்வாணத்துடன் கீழே கொண்டு படுத்து உருண்டுள்ளார். பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்த போலீசார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் மயிலாப்பூர்ரை சேர்ந்த சண்முகராஜ் என்று தெரியவந்தது. அதே சமயம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்ட நபரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.