Monday, Apr 28, 2025

அரை நிர்வாணத்தில் திருமணம் செய்த "அகோரி பாபா" - திருச்சியில் பரபரப்பு!

trichy aghorimarriage
By Petchi Avudaiappan 3 years ago
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருச்சியை சேர்ந்த பிரபல அகோரி சாமியார் ஒருவர் நேற்று தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை சேர்ந்த அகோரி பாபா மணிகண்டன் தனது இளம் வயதில்  காசிக்கு சென்று அங்கு தங்கி சாமியார்களோடு சாமியாராக சில காலம் இருந்தார். அவர்களின் வாழ்க்கை முறை பிடித்து போய், சிவ பக்தனாக மாறி அவர்களோடு சேர்ந்த அகோரி பயிற்சியெடுத்தார். 

அதன்பின் தமிழ்நாடு திரும்பிய அவர் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுடுகாட்டில் தங்கி இருந்தார். பின்  திருச்சிக்கு இடம் பெயர்ந்து அங்கு தனது சொந்த ஊரான அரியமங்கலம் அருகே மக்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார். இரவில் அடிக்கடி இவர் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் பூஜை செய்வது வழக்கம். 

இவரை சந்திக்க வந்த பலரை சிஷ்யர்களாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு சிறப்பு அகோரி பயிற்சியும் அளித்தார். இவரின் சிஷ்யர் சமீபத்தில் விபத்தில் பலியான நிலையில் அவரின் உடலுக்கு அகோரி மணிகண்டன் இறுதி சடங்கு நடத்தியது பெரிய அளவில் வைரலானது.

இந்த நிலையில்தான் அகோரி சாமியார் மணிகண்டன் நேற்று தனது சிஷ்யையை திருமணம் செய்து கொண்டார். இவரிடம் கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண் சிஷ்யையாக பயிற்சி எடுத்து வந்தார். இதில் பிரியங்கா மீது காதல் வயப்பட்ட அகோரி சாமியார் மணிகண்டன் இன்று கோவிலில் வைத்து பிரியங்காவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி மந்திரம் ஓத திருமணம் செய்து கொண்டார்.

உடல் முழுக்க விபூதி பூசி அகோரி மணிகண்டன் அரை நிர்வாணத்தில் காட்சி அளித்தார். பிரியங்காவும் முகம் முழுக்க விபூதி பூசி இருந்தார். இந்த திருமணம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.