ஓர் இரவு.. சிறையில் கைதியாக வாழ ரூ.500 - எங்க தெரியுமா?
ஓர் இரவு சிறையில் தங்குவதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டம் அறிமுகமாகவுள்ளது.
புதிய திட்டம்
உத்தரகாண்ட், ஹல்த்வானியில் உள்ள சிறை நிர்வாகம், ஜாதகத்தில் இருக்கும் குறைகளுக்குச் சிறை செல்லும்படி பரிகாரங்கள் இருப்பவர்களுக்கு, ஓர் இரவு சிறையில் தங்குவதற்கு 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய சிறைச்சாலை அதிகாரியொருவர், ``1903-ம் ஆண்டு கட்டப்பட்ட ஹல்த்வானி சிறைச்சாலையில் ஆறு பணியாளர்கள் தங்கும் அறைகளுடன் ஒரு பழைய ஆயுதக் களஞ்சியம் இருக்கிறது.
ரூ.500 கட்டணம்
கொஞ்ச காலமாகவே இது கைவிடப்பட்ட நிலையில்தான் இருந்தது. தற்போது இது சிறை விருந்தினர்களுக்காகத் தயாராகி வருகிறது. மேலும், இது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட நபர்களை சில மணிநேரம் சிறையில் இருக்க அனுமதிக்குமாறு அடிக்கடி மூத்த அதிகாரிகளிடமிருந்து உத்தரவுகள் வருகின்றன.

இதுபோன்ற விவகாரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நபரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின்படி சிறைத் தண்டனை தவிர்க்க முடியாதது என ஜோதிடர்கள் அறிவுறுத்தப்பட்டவையாக இருக்கும். அத்தகையவர்களுக்கு இந்த செயல் மூலம் போலி சிறையை உருவாக்க முடியும்.
அதில் ஓர் இரவு தங்குவதற்குப் பெயரளவில் 500 ரூபாய்க்கு கட்டணமும் விதிக்கப்படுகிறது. அதோடு அவர்களுக்கு சிறை சீருடையும், சிறை உணவும் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.