மகனுக்கு பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகம் - 200 பேரை நடுரோட்டில் எரித்த கேங் லீடர்
மகனுக்கு பில்லி சூனியம் வைத்ததாக சந்தேகித்து வன்முறை கும்பலால் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹைதி
கரீபிய தீவுகளில் அமைந்துள்ள 3வது பெரிய நாடு ஹைதி ஆகும். ஹைதியின் தலைநகராக உள்ள போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) உள்ளது.
இங்குள்ள Cite Soleil என்ற துறைமுக பகுதி மக்கள்தொகை மிகுந்த குடிசைப் பகுதி. மேலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நடைபெறும் பகுதியாகும்.
மகனுக்கு சூனியம்
அங்குள்ள வார்ஃப் ஜெர்மி என்ற கும்பலை சேர்ந்த தலைவன் மோனல் மிகானோ பெலிக்ஸ் என்பவரின் மகன் நோய்வாய் பட்டுள்ளார். அப்போது அவரது மகனை அழைத்து கொண்டு வெளியிடத்தில் உள்ள தேவாலயத்தின் பாதிரியாரை அணுகியுள்ளார்.
பெலிக்ஸ் மகனுக்கு அப்பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் எனவே அவர்களை கொன்று விடுமாறு பெலிக்ஸுக்கு பாதிரியார் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெலிக்ஸ் அந்த பகுதியில் உள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் கொன்று விடுமாறு தனது கும்பலுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த கும்பல் ஆண்கள் பெண்கள் என சுமார் 200 பேர் வரை கத்தியால் கொன்று குவித்துள்ளனர்.
தெருவில் எரிக்கப்பட்ட உடல்கள்
இதனையடுத்து டிசம்பர் 6-7 ஆம் தேதிக்கு இடையில் ஆண், பெண் என கிட்டத்தட்ட 200 பேரை கொன்று குவித்துள்ளனர். குறைந்தது 184 பேர் கொல்லப்பட்டுள்ளதை தனது அறிக்கையில் உறுதிப்படுத்திய ஐநா, இந்த படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹைதி அரசும் இந்த படுகொலைகளை உறுதிசெய்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு தெருவில் எரிக்கப்பட்டதாக அப்பகுதியிலிருந்து நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான கூட்டுறவு (CPD) அமைப்பு தெரிவித்துள்ளது.
வார்ஃப் ஜெர்மி கும்பலின் தலைவரான பெலிக்ஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைய பக்கத்து நாடான டொமினிகன் குடியரசு கடந்த 2022 ஆம் ஆண்டு தடை விதித்தது.