கடவுள் இல்லைனு சொல்றவங்க கையில் கோவில்; இந்துக்கள் வீதிக்கு வாங்க: எச்.ராஜா
கடவுள் இல்லை என்பவர்கள் கையில் கோவில் இருப்பதாக எச்.ராஜா திமுகவை விமர்சித்துள்ளார்.
இந்து கோவில்
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்று நம் கோவில்கள் நம்மிடம் இல்லை, திமுக கட்டுப்பாட்டில் உள்ளன.
கடவுள் இல்லை என கூறும் திமுக 40,000 இந்து கோவில்களை தன் கையில் வைத்துள்ளது. உண்டியல் பணத்தை மட்டுமே அறநிலையத்துறை எடுத்துச் செல்கிறது.
எச் ராஜா விமர்சனம்
கோவில்களை முறையாக பராமரிப்பதில்லை. கோவிலை பராமரிப்பதற்கு உரிய சம்பளத்தை பூசாரிகளுக்கு கொடுப்பதில்லை. திமுக ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேக பணியில் முறைகேடு நடந்துள்ளது.
அங்கு கான்கிரீட் தளங்கள் பெயர்ந்துள்ளன. தமிழகத்தில், 9,500 கோவில்கள் கணக்கே கொடுக்கவில்லை என நீதிமன்றம் சொல்கிறது. திமுக அரசு நடத்திய முருக பக்தர்கள் மாநாடு, இந்துக்களின் காணிக்கை பணத்தில் நடத்தப்பட்டது.
அதற்கு இதுவரை கணக்கு கொடுக்கவில்லை. கணக்கு காட்டாத அறநிலையத்துறைக்கு எதிராக இந்துக்கள் வீதிக்கு வரவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.