உதயநிதி துணைமுதல்வரானால் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கு - எச். ராஜா எச்சரிக்கை!
உதயநிதி துணைமுதல்வரானால் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச். ராஜா
பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, திண்ணைப் பள்ளியில் அனைவருக்கும் பொதுவாகவும், இலவசமாகவும் கல்வி கிடைத்தது. இது தான் சனாதன பாரம்பரியம்.
சனாதனத்தைப் பற்றிய எதிர்ப்பு என்பது தமிழகத்தில் கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது.உதயநிதியை துணைமுதல்வர் ஆக்கினால் தமிழகத்தில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.
உதயநிதி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல் துறை திருவேங்கடத்தை அவசர அவசரமாகக் கொலை செய்தது ஏன்? ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அதிராம் மிக்க ஆளும் கட்சி நபர் ஒருவர் உள்ளார்.
இதில் ஆளும் கட்சியினரின் தொடர்பு அதிகம் இருப்பதாக சந்தேகம் எழுகின்றது. ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கொண்டு வந்தால் மட்டுமே உண்மை நிலவரம் வெளிவரும் என கூறி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் நிச்சயம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.