தமிழனை குடிகாரனாக மாற்றியது கருணாநிதி தான் - எச்.ராஜா சாடல்!
தமிழனை குடிகாரனாக மாற்றியது கருணாநிதி தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதோ பேசிய அவர் "திமுக அரசு தீய நோக்கங்கள் கொண்ட அரசாக உள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென தொடர்ந்து நாங்களும் கேட்கிறோம்.
அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொள்வது தான் அவருக்கு கௌரவம். இந்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளிப்படையாக பேச அனுமதிக்க வேண்டும்.
குடும்பங்கள் சீரழிகின்றன
கமல்ஹாசன் அரசியலில் முக்கியத்துவம் இல்லாத நபராக தமிழ்நாட்டில் இருக்கிறார். அவரின் டார்ச் லைட் தொலைந்து போய்விட்டது. மதுவால் கிடைக்கும் வருமானம் மக்களிடம் இருந்து அடித்துப் பறித்தது தான்.
தமிழ்நாட்டில் மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன, பலர் விதவைகளாக மாறுகிறார்கள். தமிழனை குடிகாரனாக மாற்றியது கருணாநிதி. கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து திமுக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.