தமிழ் படிச்சா பிச்சைக்காரனா கூட இருக்க முடியாது; சொன்னது பெரியார் - ஹெச்.ராஜா தாக்கு

Periyar E. V. Ramasamy Madurai H Raja
By Sumathi Jan 23, 2025 02:30 PM GMT
Report

தமிழை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது என கூறியது பெரியார் என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

பெரியார் விவகாரம்

மதுரையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் கட்டமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்மத்தின் அடிப்படையில்.

H Raja

வள்ளுவரை விட சனாதனி உண்டா ? பல இடங்களில் இந்து தெய்வங்களைப் பற்றி வள்ளுவர் பேசியுள்ளார். அந்தக் குறளை தங்கத் தட்டில் இருக்கும் மலம் என பெரியார் பேசினார். விமான நிலையம் வேண்டும், ஆனால் பரந்தூரில் வேண்டாம் என்கிறார்.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ராஜதந்திரமா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது ராஜதந்திரமா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஹெச்.ராஜா தாக்கு

விஜய் விமான நிலையத்தை எங்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகளிடம் பேசி ஒப்பந்தம் வாங்கி கொடுத்தால், மத்திய அரசு அங்கு விமான நிலையம் அமைக்கும். எல்லா அரசியல்வாதிகளும் தற்குறிகள். அவர்களுக்கு பிரச்சினைகள் புரிவதில்லை.

periyar

தற்போது சீமான் தொடர்ச்சியாக பெரியாரைப் பற்றி பேசி வருகிறார். ஆனால், சந்தேகம் இல்லாமல் ஈவெரா பத்தி முதலில் பேசியது ஹெச்.ராஜாதான், பாஜக தான். தமிழ் காட்டு மிராண்டி மொழி, தமிழை படிக்காதீர்கள், தமிழை படித்தால் பிச்சைக்காரனாக கூட இருக்க முடியாது.

வேலைக்காரியோடு ஆங்கிலத்தில் பேசு, பொண்டாட்டியோடு ஆங்கிலத்தில் பேசு என்று பேசியவர் ஈவெரா. அவர் தலித் விரோதி, பட்டியலின சமூக மக்களின் முதல் எதிரி ஈவெரா" என்று தெரிவித்துள்ளார்.