பரந்தூருக்கு பதில் இந்த இடத்தை தேர்வு செய்யுங்க.. எந்த பாதிப்பும் ஏற்படாது - அன்புமணி தகவல்!

Anbumani Ramadoss M K Stalin Tamil nadu
By Vidhya Senthil Jan 23, 2025 11:30 AM GMT
Report

 பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாம் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பரந்தூர்

பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தை செயல்படுத்தி முடிப்பது தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தில் முக்கியமான மைல்கல் என்றும் அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியிருந்தார். ஆனால், இப்போது பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்கு முந்தைய அதிமுக அரசும்,

பரந்தூருக்கு பதில் இந்த இடத்தை தேர்வு செய்யுங்க.. எந்த பாதிப்பும் ஏற்படாது - அன்புமணி தகவல்! | Anbumani Slam Tngovt Lies Parandur Airport Issue

மத்திய அரசும் தான் காரணம் என்று குறிப்பிடுகிறார்சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற யோசனை எழுந்த போதே திருப்போரூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக இருக்கிறது என்றும், அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

[

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மாநில அரசால் திருப்போரூர், பட்டாளம், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்கள் தான் பரிந்துரைக்கப்பட்டன. திமுக அரசு நினைத்திருந்தால் திருப்போரூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால், பரந்தூரை தேர்வு செய்தது திமுக அரசு தான்.

புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நான், புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைப்பதுதான் யாருக்கும் பாதிப்பு இல்லாததாக இருக்கும் என்று கூறியிருந்தேன்.

திமுக அரசு

ஆனால், திமுக அரசு தான் ஏதோ சில காரணங்களுக்காக பரந்தூரில் தான் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. திருப்போரூரில் புதிய விமான நிலையத்தை ஏன் அமைக்கக்கூடாது? என்ற வினா எழுந்த போது, அதற்கு அருகில் கல்பாக்கம் அணுமின்நிலையமும்,

தாம்பரத்தில் விமானப்படைத் தளமும் இருப்பது தான் காரணமாகக் கூறப்பட்டது.அதன்படி பார்த்தால் இப்போது விமான நிலையம் அமைக்கப்படவுள்ள பரந்தூருக்கு அருகில் கடற்படைத் தளம் உள்ளது. அங்கும் விமானங்கள் வந்து செல்லும்.

parandhur airport issues

மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களுக்கு அருகில் பழைய விமான நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.இப்போதும் கூட காலம் கடந்துவிட வில்லை. திருப்போரூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப் பட்டால்,

அதையும் இப்போதுள்ள விமான நிலையத்தையும் மெட்ரோ ரயில் மூலம் எளிதாக இணைக்க முடியும். இரு விமான நிலையங்களுக்கு இடையிலான தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். இதை உணர்ந்து, சென்னைக்கான புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.