தமிழ்நாட்டு அரசியலில் முக்கியம் இல்லாத நபர் கமல்ஹாசன் - H. ராஜா விமர்சனம்!

Tamil nadu DMK H Raja
By Swetha Jun 26, 2024 11:28 AM GMT
Report

தமிழ்நாட்டு அரசியலில் பொருத்தமற்ற நபர் கமல்ஹாசன் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

 H.ராஜா காட்டம் 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, “1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சியை கொண்டு வந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்ற நாட்களை நீட்டி சட்டமன்றங்களை செயல்பட விடாமல் செய்து சர்வாதிகார ஆட்சி நடத்தியது காங்கிரஸ் கட்சி.

தமிழ்நாட்டு அரசியலில் முக்கியம் இல்லாத நபர் கமல்ஹாசன் - H. ராஜா விமர்சனம்! | H Raja Slams Kamalhassan

அரசியலமைப்பு சட்டத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ். அதை செய்த தலைவர் இந்திரா காந்தி. ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி இருப்பதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர்களையும் பாஜக சிறையில் வைக்கவில்லை. இன்று முழு ஜனநாயகம் உள்ளது.

எமர்ஜென்சி காலத்தில் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் உயிரை காப்பாற்றி... தான் அடிவாங்கி உயிர்நீத்தவர் சிட்டிபாபு. அவரை குறித்து திமுகவிற்கு கவலையில்லை. திமுகவிற்கு சேகர்பாபு பற்றி தான் கவலை சிட்டிபாபு பற்றி எந்த கவலையும் இல்லை. எமர்ஜென்சி கொடுமைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறோம்.

H.ராஜா உத்தரவால் நாயை மண்டையில் அடித்தே கொன்ற கும்பல் - கொதிப்பில் விலங்குகள் நல வாரியம்

H.ராஜா உத்தரவால் நாயை மண்டையில் அடித்தே கொன்ற கும்பல் - கொதிப்பில் விலங்குகள் நல வாரியம்

கமல்ஹாசன் ..

கொலைகாரர்கள், கொள்ளைகாரர்களின் ஒட்டுமொத்த கும்பல் தான் இண்டி கூட்டனி. இந்த சர்வாதிகார கும்பல் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாஜகவில் ஜாதி பாகுபாடு என்பது இல்லை, தமிழகத்தில் கிருபாநிதி தலைவராக இருந்தார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் டெல்லியில் அகில இந்திய தலைவராக பங்காரு லட்சுமணன் இருந்தார்.

தமிழ்நாட்டு அரசியலில் முக்கியம் இல்லாத நபர் கமல்ஹாசன் - H. ராஜா விமர்சனம்! | H Raja Slams Kamalhassan

இதுபோன்று விஷமிகள் தீயசக்திகள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் பேசுவதை கண்டு கொள்ளக் கூடாது. திமுக அரசு தீய நோக்கங்கள் கொண்ட அரசாக உள்ளது. கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென தொடர்ந்து நாங்களும் கேட்கிறோம். அதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்வது தான் அவருக்கு கௌரவம்.

இந்த விவகாரத்தில் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை வெளிப்படையாக பேச அனுமதிக்க வேண்டும். கமல்ஹாசன் அரசியலில் முக்கியத்துவம் இல்லாத நபராக தமிழ்நாட்டில் இருக்கிறார். அவரின் டார்ச் லைட் தொலைந்து போய்விட்டது.

மதுவால் கிடைக்கும் வருமானம் மக்களிடம் இருந்து அடித்துப் பறித்தது தான். தமிழ்நாட்டில் மதுவால் குடும்பங்கள் சீரழிகின்றன, பலர் விதவைகளாக மாறுகிறார்கள். தமிழனை குடிகாரனாக மாற்றியது கருணாநிதி. கள்ளக்குறிச்சி சம்பவத்திலிருந்து திமுக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.