H.ராஜா உத்தரவால் நாயை மண்டையில் அடித்தே கொன்ற கும்பல் - கொதிப்பில் விலங்குகள் நல வாரியம்

BJP H Raja
By Thahir Oct 08, 2022 07:24 AM GMT
Report

ஹெச்.ராஜாவின் உத்தரவால் அவரது வளர்ப்பு நாயை கும்பல் ஒன்று அடித்து கொன்ற விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள இந்திய விலங்கு நல வாரியம், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நாயை கொன்ற விவகாரம் 

கடந்த செப்படர் 21 ஆம் தேதி ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் வீட்டில் வளர்த்த அல்சேசன் நாய்க்கு வெறிபிடித்ததாகவும், அதனால் நாய் பிடிப்பவரிடம் சொல்லி அதை கல்லு மூங்கிலால் அடித்தபோது நாய் இறந்துவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜாவின் மேற்கண்ட ட்வீட்டர் பதிவை ஆதாரமாக கொண்டு அவர் மீது விலங்கு நல வாரியம் புகார் செய்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சொல்லி இந்திய விலங்கு நல வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதில், மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது குற்றமாகும்.

H.ராஜா உத்தரவால் நாயை மண்டையில் அடித்தே கொன்ற கும்பல் - கொதிப்பில் விலங்குகள் நல வாரியம் | H Raja Pet Dog Killed Animal Welfare Board Notice

இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தல், விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை சமர்பிக்க சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.