அஜித் கிடைத்து விட மாட்டாரா என திமுக முயற்சிக்கிறது - எச்.ராஜா
விஜய் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என எச்.ராஜா பேசியுள்ளார்.
எச்.ராஜா
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜகவின் மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருக்கின்ற திரவிடியன் ஸ்டாக் அரசாங்கம் கோவிலின் நிதியை தொடந்து தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். பழனியில் நடைபெற்ற முருகன் மாநாடு நிறைவு உரைக்கு சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அந்த மாநாட்டை ஆன்மிக மாநாடு இல்லை என கூறினார்.
உதயநிதி கிறிஸ்டியன்
ஆன்மிக மாநாடு இல்லை என்றால் பழனி முருகன் கோயில் பணத்தை ஏண்டா எடுத்த என கேள்வி கேட்பார்களா இல்லையா? ஆன்மீக மாநாட்டிற்கு சென்றவர் அரசியல் பேசியது ஏன்? இந்து விரோதி உதயநிதி ஸ்டாலின் ஹிந்து மதத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிப்பேன் என கூறினார். தான் ஒரு கிறிஸ்டியன் என அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
விஜய் கட்சியின் தீர்மானங்களை பார்க்கும் போது, அவர் திமுகவில் சேர்ந்து கொள்ளலாம் என சொல்ல தோன்றுகிறது. திமுக கொள்கைகள் போல நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்கிறார். நீட் தேர்வு திமுக அமைச்சர், காங்கிரஸ் கூட்டணியால் உருவானது.
அஜித்
அடுத்ததாக கச்ச தீவு விவகாரத்தில் பாஜகவிற்கு தொடர்பு இல்லை. கச்சத்தீவை மீட்க வேண்டுமென்றால் இலங்கையுடன் பேசி ஒப்பந்தம் செய்யாமல் மீட்க முடியாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு காலத்தில் சீமான் பாஜகவின் பி டீம் என்று சொன்னார்கள், இப்போது விஜய்யை பி டீம் என்று சொல்கிறார்கள். ஒரு கட்சிக்கு எத்தனை பி டீம்? கட்சி தாங்காது. விஜய்தான் எடுத்த உடனே ஒன்றிய அரசு என சொல்லி விட்டாரே? அப்போதே அவர் திராவிட சித்தாந்தம்தான்.
தண்ணீருக்குள் விழுந்து ஒருவரின் நிலைதான் தற்போது திமுகவிற்கு. தல கிடைக்க மாட்டாரா? அஜித் கிடைக்க மாட்டாரா என ஏதாவது முயற்சி செய்து வருகிறார்கள்" என பேசியுள்ளார்.