சீமான் இதை கைவிட்டால் பாஜக கூட்டணிக்கு ரெடி - ஹெச். ராஜா பேட்டி!

Tamil nadu BJP Seeman H Raja
By Vinothini Jun 28, 2023 05:35 AM GMT
Report

பாஜக முன்னாள் செயலாளர் ஹெச்.ராஜா சீமான் உடன் கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

விழா

சிவகங்கையில் பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க கண்காட்சியை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா திறந்து வைத்தார். அதில் பேசிய அவர் சீமான் உடனான கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

h-raja-says-about-tieup-with-seeman

அதில் அவர் பேசுகையில், ‘’ சீமான் தமிழ் தேசிய பிரிவினைவாத கொள்கையை கைவிட்டு விட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்தால் பாஜகவுடன், சீமான் நெருங்க வாய்ப்பு உள்ளது. தனித்தனியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே, நண்பர் சீமான் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் அவருடன் பேசத் தயாராக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

காட்டம்

இதனை தொடர்ந்து, அவர், "அரசியலில் ஈடுபட நடிகர் விஜய்க்கு திரைப்பட பாப்புலாரிட்டி மட்டும் போதாது. இதற்கு கமலஹாசனே உதாரணம். செந்தில் பாலாஜியின் உடல்நிலை முழு சந்தேகமளிக்கும் வகையில் இருப்பதாகவும், செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது படம் வெளியிடாதது ஏன் என்று கேள்வி கேட்ட ஸ்டாலின்,

h-raja-says-about-tieup-with-seeman

இன்று செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து படம் வெளியிடாதது ஏன்?. செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு போவதற்கு ஸ்டாலின் தான் காரணம். ஸ்டாலினின் சபதம் நிறைவேற, அமலாக்கத்துறை பணியாற்றுகின்றனர்" என்று கூறியுள்ளார்.