பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஸ்ரீராமர் கோஷம் எரியத்தானே செய்யும் - சீண்டும் எச்.ராஜா
ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டது குறித்து எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெய் ஶ்ரீராம் கோஷம்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்ற லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
அப்போது, மைதானத்தில் ரிஸ்வான் பெவிலியன் திரும்பிய போது அங்கு இருந்த இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை எழுந்தது.
எச்.ராஜா கருத்து
தொடர்ந்து இதுகுறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் விளையாட்டு என்பது வெறுப்பு பரப்பும் கருவியாக இருக்கக் கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவரான எச் ராஜா இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், பாரத நாட்டின் அரசயலமைப்பு சட்ட கையெழுத்து வடிவின் முதல் பக்கத்தில் எம்பெருமான் ஶ்ரீராமரின் படம் உள்ளது. இன்றும் பாராளுமன்றத்தில் பார்வைக்காக உள்ளது. ஆகவே ஜெய் ஶ்ரீராம் கோஷம் ஆட்சேபகரமானதல்ல.
மரியாதா புருஷோத்தமன் ஶ்ரீராமர் நம்நாட்டின் கலாச்சாரத்தின் அடையாளம்.
பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியத்தானே செய்யும்? எனக் குறிப்பிட்டுள்ளார்.