மாணவிக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை - ஜிம் பயிற்சியாளர் வெறிச்செயல்!
ஜிம் பயிற்சியாளர் மாணவிக்கு போதை ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
போதை ஊசி
உத்தரபிரதேசம், கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் பகுதியில் ஜிம் ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது மாணவியிடம் தவறான நோக்கத்தில் பழகிய அர்ஜுன் சிங் அவரது செல்போன் நம்பரை கேட்டு தொல்லை செய்துள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார்.
தொடர்ந்து அர்ஜுன் சிங் ஜிம்மில் வைத்து மாணவிக்கு போதை மருந்தை கொடுத்து அவரை போதைக்கு அடிமையாக்கியுள்ளார். பின், அடிக்கடி போதை ஊசி செலுத்தி மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேலும் வீடியோவை காட்டி மிரட்டி மாணவியை தனது வீட்டுக்கு வரவழைத்தும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத மாணவி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
உடனே போலீஸில் புகாரளித்ததில், அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாணவியின் பெற்றோர் அலகாபாத் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 ஆண்டுகளுக்கு பிறகு பயிற்சியாளரை கைது செய்துள்ளனர்.