கல்யாணத்திற்கு பிறகு இதையெல்லாம் நிறுத்திட்டீங்களானு கேட்குறாங்க - ஜிவி பிரகாஷ் மனைவி வேதனை!
ஜிவி பிரகாஷ் மனைவி பாடகி சைந்தவி அளித்த பேட்டி கவனம் பெற்றுள்ளது.
சைந்தவி
தமிழ் சினிமா உலகில் பிரபலமான பின்னணி பாடகி சைந்தவி. 2005ல் அன்னியன் திரைப்படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பாடியுள்ளார். இதற்கிடையில், தன்னுடைய பள்ளி நண்பனான இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
என்னுடைய அட்வான்டேஜ்..
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், கடந்த 18 ஆண்டுகளாக நான் பின்னணி பாடகியாக இருக்கிறேன். என்னிடத்தில் வந்து திருமணத்திற்கு பிறகு நீங்கள் பாடுவதை நிறுத்தி விட்டீர்களா? ஏன் பாடுவதில்லை? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஏன் இப்படி கேட்கிறார்கள், நான் எங்கேயும் போகல, இங்க தானே நிறைய பாடிக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் யோசிப்பேன்.
இப்படி அவர்கள் யோசிப்பது தான் எனக்கு பெரிய டிஸ்அட்வான்டேஜ். அதேசமயம் இந்த பாட்டை கொடுத்தால் அவங்க நல்லா பாடிடுவாங்க என்ற ஒரு அசெம்ப்ஷனும் இருக்கிறது.
அதுதான் என்னுடைய அட்வான்டேஜ். அதற்கு நான் கடவுளுக்கு தான் நன்றி சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.