2வது திருமணம் செய்யும் ஜிவி பிரகாஷ்? பிரபலம் உடைத்த தகவல்!

Tamil Cinema G V Prakash Kumar
By Sumathi May 22, 2024 02:30 PM GMT
Report

ஜிவி பிரகாஷ் 2வது திருமணம் செய்யவுள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

ஜிவி பிரகாஷ்

தொட்டி ஜெயா, ஏபிசிடி, சரவணன், பட்டியல், பரமசிவன், ஆதி, வரலாறு, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல படங்களில் சைந்தவி பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

gv prakash

இதில், பல படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 2013-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் பெற்றோர்களின் சம்மதத்துடன் சைந்தவியை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

தற்போது ஜிவி ஹீரோவாக களமிறங்கி நடித்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இனிமேல் சேர்ந்து வாழப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்போ..ஜீவி சொன்ன அந்த வார்த்தை - மனம் திறந்த சைந்தவி!

கர்ப்பமாக இருக்கேன்னு சொன்னப்போ..ஜீவி சொன்ன அந்த வார்த்தை - மனம் திறந்த சைந்தவி!

2வது திருமணம்? 

இதுகுறித்து பேசியுள்ள சினிமா பத்திரிக்கையாளர் சுபைர், ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு சின்ன வயது தான். கருத்து வேறுபாடு எல்லாம் நீங்கி மீண்டும் சேர்ந்து வாழ கூட வாய்ப்பு இருக்கிறது. மறுமணம் என்ற விஷயம் ஜிவி கையில் தான் இருக்கிறது. காலம் தான் முடிவு செய்யும்.

2வது திருமணம் செய்யும் ஜிவி பிரகாஷ்? பிரபலம் உடைத்த தகவல்! | Gv Prakash Getting Married Again Rumour Viral

இப்போது இரண்டு பேருமே காயத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு தேவை கொஞ்சம் மன அமைதி தான் எனத் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் 2வது திருமணம் செய்யவுள்ளதாக பரவு தகவல் வெறும் வதந்தியே. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.