உடம்பில் வெட்டுப்படாத இடமே இல்லை; ஜி.வி.பிரகாஷ், மாரி செல்வராஜ் கண்டனம் - 6 சிறுவர்கள் கைது!
அண்ணன், தங்கை மீது நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரிவாள் வெட்டு
திருநெல்வேலி, நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள்.
இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.
6 பேர் கைது
உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
திரை பிரபலங்கள் ஜி.வி.பிரகாஷ், மாரிசெல்வராஜ், மோகன்.ஜிஇந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்கள் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரும் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.