அண்ணன், தங்கையை தலை முதல் கால்வரை சரமாரியாக வெட்டிய மாணவர்கள் - ஊரை உலுக்கிய சம்பவம்!
பள்ளி மாணவர்கள், அண்னன் தங்கையை சரமாரியாக வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதி பிரச்சணை
நெல்லை, நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியர். இவர்களின் மகன் சின்னத்துரை பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இதில், சின்னத்துரை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதில் ஆசிரியர்கள் விசாரணையில் பள்ளியில் தன்னை சிலர் அடிப்பதாகவும் அவர்கள் குறித்த விவரத்தையும் கூறியுள்ளார்.
கொடூர தாக்குதல்
அதனையடுத்து சின்னத்துரையை அந்த மாணவர்கள் பள்ளி முடிந்து பின்பு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சின்னத்துரையை மூன்று பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.
தடுத்த தங்கைக்கும் கையில் வெட்டு விழுந்துள்ளது. உடனே மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போலீஸார் தாமதமாக வந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.