பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக்கூடாது - சமூக பாதுகாப்புத்துறை..!

Government of Tamil Nadu
By Thahir Jul 14, 2022 01:19 PM GMT
Report

பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கைகளில் கயிறு கட்டக்கூடாது

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை சார்ந்த சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம்.

பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக்கூடாது - சமூக பாதுகாப்புத்துறை..! | School Students No Longer Do Not Build Rope Hands

அவ்வகையில், சமூக பாதுகாப்புத்துறை மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருக்கிறது.

வேறு சில மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த உத்தரவில், பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகங்களில் எந்த மாதிரியான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 20க்கும் அதிகமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் தேய்த்து தலைவாரவேண்டும், டாட்டூ குத்தக்கூடாது, காலணி அணிந்து வரவேண்டும், கம்மல், செயின், காப்பு போன்றவற்றை மாணவர்கள் அணியக்கூடாது,

பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் வண்ண கயிறு அணிவது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக மாணவர்களிடையே பிளவு உருவாகி வருகிறது. சில சமயங்களில் இது மோதலுக்கும் வழிவகுக்கிறது. எனவே, மாணவர்களின் நலன் கருதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.