2 மனைவிகளுடன் டைம் டேபிள் போட்டு குடும்பம் நடத்தும் இளைஞர்!
இளைஞர் ஒருவர் அட்டவணை போட்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
2 திருமணம்
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சீமா. இவர் ஹரியானாவைச் சேர்ந்த இன்ஜீனியர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் சீமாவை பெற்றோர் வீட்டில் விட்டு வேலை காரணமாக குருகிராமில் வேலை செய்துவந்தார்.

அப்போது, அங்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதில் அவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவர்களுக்கு 1 பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இதனை அறிந்த முதல் மனைவி கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார்.
வித்தியாச முடிவு
ஆனால் அவருக்கு கொடுக்க பணம் இல்லை. இதனால் மனைவிகள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். அதில், வாரத்தில் தலா மூன்று நாள்களை இரு மனைவிகளுடனும் கணவர் செலவிட வேண்டும்.
[GSR8MH[
மீதமிருக்கும் ஒரு நாளை கணவர் விரும்பும் மனைவியுடன் தங்கிக்கொள்ளலாம். இதற்காக இரண்டு மனைவிக்கும் தனித்தனி வீட்டை கணவர் வாங்கிக்கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.