குரு பெயர்ச்சி 2025 - ராஜ பொற்காலமும், அதிர்ஷ்டமும் இந்த 6 ராசிகளுக்குத்தான்..
குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கும் என இங்கே காணலாம்.
குரு பெயர்ச்சி
13 மாதங்களுக்கு ஒரு முறை குரு பெயர்ச்சி நிகழும். இந்த முறை குரு பெயர்ச்சி மே 14, 2025 அன்று இரவு 11.20 மணிக்கு நிகழும். ரிஷப ராசியில் பயணித்து வரும் குரு மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். இதன் காரணமாக 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், லாபம், நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது.
மேஷம்: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
ரிஷபம்: செல்வம் மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும். வருமானமும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் அன்பு அதிகரிக்கக்கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்: குடும்ப வாழ்க்கையில், நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்: அதிர்ஷ்டம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கலாம். உயர்கல்வி மற்றும் பதவி உயர்வுக்காக எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும்.
துலாம்: வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் பெருகும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பெற்றோரின் முழு ஆதரவை பெறுவீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும்.
கும்பம்: தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். தாயாரின் உடல்நிலை மேம்படும்.